மைத்திரி உத்தரவிட்டு ஒரு வருடமாகியும்கூட காணி விடுவிப்பில்லை – வருத்தத்துடன் அவரே ஒப்புக்கொண்டார்

மைத்திரி உத்தரவிட்டு ஒரு வருடமாகியும்கூட காணி விடுவிப்பில்லை – வருத்தத்துடன் அவரே ஒப்புக்கொண்டார்

Expose` : Good governance commander in chief completes two years but MR ‘s control still within army !

மைத்திரி உத்தரவிட்டு ஒரு வருடமாகியும்கூட காணி விடுவிப்பில்லை - வருத்தத்துடன் அவரே ஒப்புக்கொண்டார்

15-Apr-2017

தமிழ் மக்­க­ளின் காணி­களை விடு­விப்­ப­தற்­கும் அர­சி­யல் கைதி­களை விடு­விப்­ப­தற்­கும் ஏற்ற நட­வ­டிக்­கை­களை ஆராய்ந்து அறி­விக்­கு­மாறு ஒரு வரு­டத்­திற்கு முன்­னரே அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­­விட்­ட­போ­தும் இது­வ­ரை­யில் ஆக்­க­பூர்­வ­மான எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இந்த விட­யத்தை வருத்­தத்­து­டன் அவரே ஒப்­புக்­கொண்­டும் உள்­ளார்.

‘‘இந்­தப் பிரச்­சி­னை­களை ஆர◌ாய்ந்து காணி­க­ளை­யும் கைதி­க­ளை­யும் எப்­போது எப்­படி விடு­விக்­கப் போகி­றீர்­கள் என்று அறி­யத்­த­ரும்­படி கேட்­டி­ருந்­தேன். ஆனால் அது நடக்­க­வில்லை. நீங்­கள் இப்­போது அது பற்றி படைத் தள­ப­தி­க­ளு­டன் பேசப்­போ­வ­தால், மீண்­டும் அது பற்றி நான் அவர்­க­ளி­டம் தெரி­விக்­கி­றேன்’’ என்று நேற்­றுத் தம்­மைச் சந்­தித்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னி­டம் தெரி­வித்­தார் அரச தலை­வர்.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் இரு­வ­ரும், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, அரச தலை­வ­ரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில் தனித்­துச் சந்­தித்­துப் பேசி­னர். இந்­தப் பேச்­சுக்­க­ளின் போதே மேற்­படி விட­யத்தை அரச தலை­வர் குறிப் பிட்­டார்.
 ‘‘திங்­கட் கிழமை (நாளை), காணி விடு­விப்பு, அர­சி­யல் கைதி­கள் விடு­தலை, காணா­மற்­போ­னோர் விட­யம் தொடர்­பில் பாது­காப்பு அமைச்­சின் செய­லர், முப்­ப­டைத் தள­ப­தி­கள், அதி­கா­ரி­க­ளு­டன் பேச்சு நடத்­த­வுள்­ளோம். அதற்கு முன்­னோ­டி­ யா­கவே அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் இந்­தச் சந்­திப்பு நடை­பெற்­றது. சுமார் அரை மணி நேரம் வரை­யில் பேச்சு நீடித்­தது’’ என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் ‘உத­யன் பத்­தி­ரி­கைக்­குத்’ தெரி­வித்­தார்.
சந்­திப்­புத் தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
காணி விடு­விப்­புத் தொடர்­பில் முத­லில் பேசப்­பட்­டது. காணி­களை விடு­விக்­கு ­மாறு ஒரு வரு­டத்­துக்கு முன்­னரே பணிப்­புரை விடுத்­து­விட்­டேன், இதற்­கான செய­ல­ணியை அமைத்து பகுதி பகு­தி­யா­க­வே­னும் காணி விடு­விக்க வேண்­டும் என்று கூறி­யுள்­ளேன். ஆனால் அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை, பாது­காப்பு அமைச்­சின் செய­லர், முப்­ப­டைத் தள­ப­தி­க­ளு­டன் நீங்­கள் பேச­வுள்­ள­தால் இது தொடர்­பான அறி­வித்­தலை அவர்­க­ளுக்கு மீண்­டும் விடுக்­கின்­றேன் என்று அரச தலை­வர் மைத்­திரி, எதிர்­கட்­சித் தலை­வர் சம்­பந்­த­னி­டம் கூறி­னார். மக்­கள் முன்­னெ­டுத்­துள்ள போராட்­டங்­கள் தொடர்­பில், அரச தலை­வ­ருக்கு, இரா.சம்­பந்­தன் எடுத்­து­ரைத்­தார்.
அர­சி­யல் கைதி­க­ளின் விடு­விப்­புப் பற்றி பேசப்­பட்­டது. பன்­னாட்டு வெசாக் தினத்தை முன்­னிட்டு தமக்கு பொது மன்­னிப்பு வழங்­கு­மாறு அர­சி­யல் கைதி­க­ளின் கோரிக்­கையை, இரா.சம்­பந்­தன், அரச தலை­வ­ரி­டம் தெரி­யப்­ப­டுத்­தி­னார். இதற்கு அரச தலை­வர் மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்­யக் கூடிய கைதி­க­ளின் விவ­ரங்­க­ளைத் தரு­மாறு கோரிக்கை விடுத்து ஒரு வரு­ட­மா­கின்­றது, அதுவும் இன்­ன­மும் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனை விரை­வு­ப­டுத்தி பெற்று நட­வ­டிக்கை எடுக்­கின்­றேன் என்று கூட்­ட­மைப்­பி­ன­ரி­டம் தெரி­வித்­தார்.
மேலும், காணா­மற்­போ­னோ­ரின் உற­வு­கள் முன்­னெ­டுக்­கும் போராட்­டம் தொடர்­பி­லும் அரச தலை­வ­ரி­டம், எதிர்­கட்­சித் தலை­வர் எடுத்­து­ரைத்­தார். இது தொடர்­பி­லும் கவ­னம் செலுத்­து­வ­ார் என அரச தலை­வர் குறிப்­பிட்­டார் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
Advertisements
Categories: Uncategorized

Post navigation

Comments are closed.

Blog at WordPress.com.

%d bloggers like this: