உயிரிழந்த மெய்ப் பாதுகாவலருக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி

உயிரிழந்த மெய்ப் பாதுகாவலருக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி

உயிரிழந்த மெய்ப் பாதுகாவலருக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி

Jul 24, 2017
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
நேற்று முன்தினம் நல்லூரில் நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த அவரது மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திரவிற்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அன்னாரின் உருவப்படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மெழுகுவர்த்திகளும் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
Categories: Uncategorized

Post navigation

Comments are closed.

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: